ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டார்க், கவாஜா குறித்து வார்னே கருத்து கூறுவதை - சாத் சேயர்ஸ்!

Updated: Thu, Jan 06 2022 20:42 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மிட்செல் ஸ்டார்க் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசவில்லை. இதனால் அவரை அணியில் சேர்க்கக்கூடாது. முதல் போட்டியில் ஜை ரிச்சார்ட்சன் உடன் ஆஸ்திரேலியா விளையாட வேண்டும் என வார்னே கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் அபாரமான பந்து வீசினார். மேலும், இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதேபோல் நேற்று தொடங்கிய 4ஆவது போட்டியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டிராவிஸ் ஹெட் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக உஸ்மான் கவாஜா அணியில் சேர்க்கப்பட்டார். அப்போதும் ஷேன் வார்னே விமர்சித்திருந்தார். கவாஜாவுக்குப் பதிலாக மிட்செல் மார்ஷை அணியில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கவாஜா அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் சதம் விளாசினார். இதனால் ஷேன் வார்னே மீது முன்னாள் வீரர் சாத் சேயர்ஸ் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து சொந்த நாட்டு வீரர்களை விமர்சித்து வரும் ஷேன் வார்னே வாயை மூட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ‘‘ஷேன் வார்னே தொடர்ந்து சொந்த நாட்டு வீரர்களும் விமர்சித்து வருகிறார். ஸ்டார்க் மீது விமர்சனம் வைத்தார். தற்போது கவாஜா மீது வைத்தார். இரண்டு தவறாகியுள்ளது. வாயை மூடவும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை