பகலிரவு டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியா!

Updated: Thu, Dec 16 2021 12:01 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கரோனா நெறிமுறைகளை மீறியதாக போட்டியில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துகிறார். மேலும் பாட் கம்மின்ஸிற்கு மாற்று வீரராக மைக்கேல் நேசர் அணியில் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். 

இதில் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - மார்னஸ் லபுசாக்னே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்தது. டேவிட் வார்னர் 20 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை