பாக்ஸிங் டே டெஸ்ட்: பரிதாபமான நிலையில் இங்கிலாந்து; ஆஸி அசத்தல்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதன்பின் நேற்றைய மூன்றாவது ஷெசனில் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, இன்றைய போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்களை சேர்த்திருந்தா. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
அணியின் தொடக்க வீரர்காள் ஹாசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ், டேவிட் மாலன், ஜேக் லீச் என களமிறங்கிய நால்வரும் ஒற்றை இலக்க ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்களை மட்டுமே சேர்த்து பரிதாபகரமான நிலையில் உள்ளது.
ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி இன்னும் 51 ரன்கள் பின் தங்கியுள்ளது. களத்தில் ஜோ ரூட் 12 ரன்களுடனு, பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.