AUS vs ENG, 5th Tes: தடுமாறும் ஆஸ்திரேலியா; இங்கிலாந்து கம்பேக்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஹாபர்ட்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றி டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் இரு சதங்களை விளாசிய உஸ்மான் கவாஜாவும் 6 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
லபுசாக்னேவுடன் ஜோடி சேர்ந்த ட்ராவிஸ் ஹெட் பொறுமையான ஆட்டத்தை காண்பித்து விக்கெட் இழப்பை தடுத்தார். பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுசாக்னே 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.
இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட் 31 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.