கபா டெஸ்டின் ஐந்தாவது நாளுக்காக காத்திருக்கிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் காபாவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 147 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் ட்ராவிஸ் ஹெட்டின் (152) சதம், வார்னர் (94), லாபுஷேன் (74) ஆகியோரின் ஆட்டத்தால் 425 ரன்களுக்கு ஆட்டமிழந்து 278 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, 2ஆவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி விரைவாக முதல் இரு விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜோ ரூட் (86) டேவிட் மலான் (80) ரன்களில் ஆட்டமிழக்காமல் போராடி வருகிறார். 58 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.
நாளை காலை நேர செஷனை மட்டும் இங்கிலாந்து அணி சமாளித்து ஆடிவிட்டால் அதன்பின் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்துவிடும். அதே நேரம் நாளை இங்கிலாந்து அணியை ஆட்டமிழக்கச் செய்தால்தான் கடைசி நாளில் குறைந்த இலக்கை எளிதாக வெல்ல முடியும் என்ற கணிப்பில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் ஆக்ரோஷமாகப் பந்துவீசுவார்கள். ஆதலால் நாளை காலை செஷனும், கடைசி நாள் ஆட்டமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
It’s all happening at the Gabba and could well be the most happening 5th day if England can trump the first session tomorrow. #ashes
— Ashwin