சிட்னி டெஸ்ட்: கம்பேக்கில் கவாஜா சதம்; வலிமையான நிலையில் ஆஸ்துரேலியா!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் போது மழைக்காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 6, கவாஜா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் கவாஜா - ஸ்மித் இணை அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தில். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 67 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா சதமடித்து தனது கம்பேக்கைக் கொடுத்தார்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இங்கிலாந்து அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்களைச் சேர்த்துள்ளது.