ஆஷஸ் டெஸ்ட்: பாட் கம்மின்ஸை சாடிய ஷேன் வார்னே!

Updated: Mon, Jan 10 2022 10:27 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியது.

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதால், போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் ஆஸ்திரேலியாவின் முயற்சி கைகூடவில்லை.

இந்நிலையில், நூலிழையில் வெற்றியை தவறவிட்ட ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சில தூக்கமில்லா இரவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே என ஷேன் வார்னே சாடியுள்ளார்.

இதுகுறித்து பேசிய வார்னே, “பாட் கம்மின்ஸ் ஒரு வெற்றியைப் பெற தவறிய பிறகு சில தூக்கமில்லாத இரவுகளை சந்திக்க நேரிடும். ஆஸ்திரேலியா முன்னதாகவே டிக்ளேர் செய்யாதது, கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த வெற்றி பறிபோயுள்ளது.

இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருந்திருந்தால், அவர்கள் தொடரை ஒயிட்வாஷை அடைவதற்கு நெருக்கமாகச் சென்றிருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை