ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார்- சரண்தீப் சிங்!

Updated: Sat, Dec 25 2021 22:02 IST
Ashwin took Shastri's comment in wrong way: Former Team India selector Sarandeep Singh (Image Source: Google)


கடந்த 2018இல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மழையால் பாதிக்கப்பட்ட அந்த டெஸ்டி டிரா ஆனது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. 

இதையடுத்து பேட்டியளித்த அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என்றார். இதுபற்றி சமீபத்தில்பேட்டியளித்த அஸ்வின், ரவி சாஸ்திரியின் கருத்துகளால் தான் நொறுங்கிப் போனதாகக் கூறினார். 

இதுபற்றி ரவி சாஸ்திரி கூறுகையில், எனது கருத்துக்கள் யாரையாவது அது காயப்படுத்தியிருந்தால் நல்லது. அஸ்வினை அது காயப்படுத்தியிருந்தால், வேதனை தந்திருந்தால் அதனால் அவர் தன் வேலையில் பொறுப்பாக இருந்ததால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் இந்த கருத்தை தவறாக எடுத்துக்கொண்டார். அவர் பேசும் இந்திய சுற்றுப்பயணத்தில் நானும் இருந்தேன். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் குல்தீப் எங்களுக்கு சிறந்த பந்துவீச்சாளர் என்று அவர் கூறுவார், ஏனெனில் அவரது பந்துவீச்சு பாணி வேறுபட்டது, அஸ்வின் இதை வேறு வழியில் எடுத்துக்கொண்டார், ஆம் சாஸ்திரி சொல்வது சரிதான், அவரது வேலை அனைவருக்கும் சேவை செய்வது அல்ல.

அஸ்வின் ஒரு சிறந்த பந்து வீச்சாளர், அவர் ஆப்பிரிக்க சூழ்நிலையில் சிறந்த பந்துவீச்சு பாணியை உருவாக்கினார். மேலும், அவர் எங்களுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்க முடியும். அவர் சாதிப்பதற்கு நிறைய இருப்பதால் இது அவரது கடைசி சுற்றுப்பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை