ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!

Updated: Mon, Aug 22 2022 15:36 IST
Image Source: Google

15ஆவது ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது, இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணி மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியும் இடம் பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. 

இதில் குரூப் ஏ மற்றும் பி பிரிபில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றில் விளையாட உள்ளது. ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனான இந்தியா ஏழு முறையும், இலங்கை ஐந்து முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் நாடு அணியை அறிவித்துள்ளது, அணிகள் பற்றிய விவரம் பின்வருமாறு.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய்.

பாகிஸ்தான் அணி

பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், ஷதாப் கான், ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் தஹானி,

வங்கதேச அணி

ஷாகிப் அல் ஹசன் (கே), அனாமுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், அபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், முகமது சைஃபுதீன், ஹசன் மஹ்மூத், முஸ்தபிசுர் ரஹ்மான், நசும் அகமது, சப்பீர் ரஹ்மான், மெஹிதி ஹசான்ட் ஹோஸ், மெஹிதி ஹசனோத், மெஹிதி ஹசானோத், நூருல் ஹசன் சோஹன், தஸ்கின் அகமது

ஆஃப்கானிஸ்தான் அணி 

முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா சத்ரான், அப்சர் சஸாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஃபரித் அகமது மாலிக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ஹஸ்ரதுல்லா ஸஸாய், இப்ராஹிம் சத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நஜிபுல்லாஹ் சத்ரான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷித் கான், சமியுல்லா ஷின்வாரி.

இலங்கை அணி

தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ஷா, ஆஷன் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரனா, தினேஷ் சண்டிமல், நுவநிந்து ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா. 

இதைத்தவிர தகுதிச்சுற்றில் மோதும் அணிகளின் விவரம்

ஹாங்காங் - நிஜாகத் கான் (கே), கிஞ்சித் ஷா, ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், பாபர் ஹயாத், அஃப்தாப் ஹுசைன், அதீக் இக்பால், ஐசாஸ் கான், எஹ்சான் கான், ஸ்காட் மெக்கெக்னி, கசன்ஃபர் முகமது, யாசிம் முர்தாசா, தனஞ்சய் ராவ், வாஜித் ஷா, ஆயுஷ் சுக்லா, அஹான் திரிவேதி, முகமது வஹீத்.

குவைத் - முகமது அஸ்லாம் (கே), நவாப் அகமது, முகமது அமீன், மீட் பவ்சர், அட்னான் இத்ரீஸ், முஹம்மது காஷிப், ஷிராஸ் கான், சையத் மோனிப், உஸ்மான் படேல், யாசின் படேல், ஷாருக் குத்தூஸ், ரவிஜா சந்தருவான், மொஹமட் ஷபீக், ஹாரூன் ஷாஹித், எட்சன் சில்வா, பிலால் தாஹிர், அலி ஜாகீர்.

சிங்கப்பூர் - அம்ஜத் மஹ்பூப் (கே), ரீசா கஸ்னவி, ஜனக் பிரகாஷ், மன்பிரீத் சிங், வினோத் பாஸ்கரன், ஆர்யமான் உச்சில், சுரேந்திரன் சந்திரமோகன், ரோஹன் ரங்கராஜன், அக்ஷய் ரூபக் பூரி, அமன் தேசாய், ஜீவன் சந்தானம், விஹான் மகேஸ்வரி, ஆர்யவீர் சௌத்ரி, அரித்ரா தத்தா.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - சுந்தங்கபோயில் ரிஸ்வான் (கே), சுல்தான் அகமது, சபீர் அலி, வ்ரித்யா அரவிந்த், காஷிப் தாவுத், ஜாவர் ஃபரித், பாசில் ஹமீத், ஜாஹூர் கான், ஆர்யன் லக்ரா, கார்த்திக் மெய்யப்பன், ரோஹன் முஸ்தபா, ஃபஹத் நவாஸ், அகமது ராசா, அலிஷன் ஷரபு, ஜுனைத் சித்திக், சிராக் சூரி, முஹம்மது வசீம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை