ஆசிய கோப்பை 2022: விராட் கோலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 182 டார்கெட்!

Updated: Sun, Sep 04 2022 21:17 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2ஆவது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதையடுத்து, இருவரும் தலா 28 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருக்கு துணையாக மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சதாப் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை