SL vs BAN, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Sep 07 2023 22:22 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
  • இடம் - ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
  • நேரம் - மாலை 3 மணி

மைதானம் எப்படி

இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும், அதே சமயம் பேட்ஸ்மேன்கள் களத்தில் நேரத்தை செலவிட்ட பிறகு பெரிய ரன்களை எடுக்கவும் உதவியாக இருக்கும். மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே எதிரணி அணிக்கு அதிர்ச்சி கொடுக்கலாம். அதனால் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 52
  • இலங்கை - 41
  • வங்கதேசம் - 09
  • முடிவில்லை - 02

உத்தேச லெவன்

இலங்கை: பதும் நிஷங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அஷலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா (கே), துனித் வெல்லாலகே, மகேஷ் திக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பதிரானா.

வங்கதேசம்: முகமது நைம், மெஹிதி ஹசன், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கே), தாஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், ஷமிம் ஹொசைன், அபிஃப் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - முஷ்பிக்கூர் ரஹீம், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள்- சரித் அஷலங்கா, பதும் நிஷங்க
  • ஆல்-ரவுண்டர் - ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தனஞ்செயா டி சில்வா, துனித் வெல்லாலகே, மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- தஸ்கின் அகமது, மகேஷ் திக்ஷன, மதீஷா பதிரானா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை