ஆசிய கோப்பை 2022, வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Aug 30 2022 09:31 IST
Asia Cup, 3rd Match: Bangladesh vs Afghanistan – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probabl
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - இரவு 7.30 மணி 

போட்டி முன்னோட்டம்

முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தலான வெற்றியைப் பெற்றது. அதிலும் அணியின் பந்துவீச்சு அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது. 

அதிலும் ஃபரூக்கி, ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரையும் வியக்கவைத்துள்ளது. அதேபோல் பேட்டிங்கில் ஹஸ்ரதுல்லா ஸஸாய், நஜிபுல்லா ஸத்ரான் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

அதேசமயம் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரையும் வென்றது. 

தற்போது அதே உத்வேகத்துடன் ஆசிய கோப்பை தொடரிலும் களமிறங்கவுள்ளது. ஆனால் தொடருக்கு முன்னதாக நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் தொடரிலிருந்து விலகியது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் சபீர் ரஹ்மான், அனமுல் ஹக், மஹ்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இருப்பது அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்துகிறது. அதேபோல் பந்துவீச்சில் டஸ்கின் அஹ்மத், எபோடட் ஹொசைன், முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 8
  • வங்கதேசம் - 3
  • ஆஃப்கானிஸ்தான் - 5

உத்தேச அணி

வங்கதேசம் - முகமது நைம், சபீர் ரஹ்மான், அனாமுல் ஹக், மஹ்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன், மொசாடெக் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, எபாடோட் ஹொசைன்.

ஆஃப்கானிஸ்தான் - நஜிபுல்லா சத்ரான், ஹஸ்ரத்துல்லா ஜசாய், இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கானி, ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி (கே), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, கரீம் ஜனத்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ், முஷ்பிகுர் ரஹீம்
  • பேட்டர்ஸ் - ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது நைம்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நபி, ஷகி அல் ஹசன், மஹ்முதுல்லா
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, நூர் அஹ்மது
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை