ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஹாங்காங்
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதிலும் பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், ஆசிஃப் அலி உள்ளிட நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சில் நசீம் ஷா, முகமது நவாஸ், ஹாரிஸ் ராவூஃப் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங் அணியும் முதல் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர்களால் வெற்றிபெற இயலவில்லை.
அணியில் யாசிம் முர்தசா, பாபர் ஹயத், ஐசாஸ் கான் ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் ஆயூஷ் சுக்லா, முகமது கசன்ஃபர் ஆகியோரும் சிறப்பாக செயல்படுவது அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அதேபோல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் முதல்முறையாக மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
உத்தேச அணி
பாகிஸ்தான்- பாபர் ஆசாம்(கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி
ஹாங்காங்– நிஜாகத் கான் (கா), யாசிம் முர்தாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி, ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்ஃபர்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
- பேட்டர்ஸ் - பாபர் ஆசம், பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, ஃபகார் ஸமான்
- ஆல்-ரவுண்டர்கள் - நிஜாகத் கான், ஷதாப் கான்
- பந்து வீச்சாளர்கள் - நசீம் ஷா, முகமது கசன்பர், ஷாநவாஸ் தஹானி, ஆயுஷ் சுக்லா