ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Sun, Sep 04 2022 09:25 IST
Asia Cup, Super 4 Match 2: India vs Pakistan – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2ஆவது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்திய அணியை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் பேட்டிங் இன்னும் வலுப்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கக்கூடும். ஹாங்காங் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவிடமிருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளதால் அவரது இடத்தில் அக்சர் படேல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா களமிறங்குவதால் ரிஷப் பந்த்துக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும்.

பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதில் தீவிரம் காட்டக்கூடும். ஹாங்காங் அணிக்கு எதிராக முகமது ரிஸ்வான், ஃபஹர் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் தரக்கூடும். பாபர் ஆசாமும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 10
  • இந்தியா - 8
  • பாகிஸ்தான் - 2

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கே), ஃபகார் ஸமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஹசன் அலி.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், தினேஷ் கார்த்திக்
  •      பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ஃபகார் ஸமான்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது நவாஸ்
  •      பந்துவீச்சாளர்கள் – புவனேஷ்வர் குமார், நசீம் ஷா, ஹரிஸ் ரவூப்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை