AUS vs ENG, 5th Test: மார்க் வுட் வேகத்தில் சரியும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் நேற்று முந்தினம் தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச செய்ய தீர்மானித்தது.
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டுக்கோப்புடன் பந்துவீசிய இங்கிலாந்து பவுலர்கள் அந்த அணியை 303 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதமடித்து 101 ரன்களும், கிறிஸ் க்ரீன் 74 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர்.
இதையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து மீண்டும் ஆஸ்திரேலியாவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 188 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 36 ரன்கள் எடுத்தார், ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின்115 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2ஆவது நாள் முடிவில் 37/3 என்ற நிலையில் 152 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களுடனும், ஸ்காட் போலண்ட் 3 ரன்களுடனும் களமிறங்கினர்.
இதில் 8 ரன்களோடு போலண்ட் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஸ்டீவ் ஸ்மித் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின் 8ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அலெக்ஸ் கேரி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்துளது. அந்த அணியில் அலெக்ஸ் கேரி 40 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 256 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.