CT 2025: வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடித்த ஜோஷ் இங்கிலிஸ்!

Updated: Sun, Feb 23 2025 12:15 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வ்ரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியானது விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்தது. 

அதன்படி லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் இங்கில்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 120 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் சதமடித்து அசத்தியதுடன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். 

அதன்படி இப்போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தியதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவர் எனும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக்கின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். முன்னதாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சேவாக் 77 பந்துகளில் சதமடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிவேக சதங்கள்

  • ஜோஷ் இங்கிலிஸ் (ஆஸ்திரேலியா) - 77 பந்துகளில் vs இங்கிலாந்து
  • வீரேந்திர சேவாக் (இந்தியா) - 77 பந்துகளில் vs இங்கிலாந்து
  • ஷிகர் தவான் (இந்தியா) - 80 பந்துகளில் vs தென் ஆப்பிரிக்கா
  • திலகரத்ன தில்ஷன் (இலங்கை) - 87பந்துகளில் vs தென் ஆப்பிரிக்கா

அதேசமயம் இப்போட்டியில் 352 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக துரத்தியதன் மூலம், ஐசிசி தொடரில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி எனும் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 345 ரன்கள் என்ற இலக்கி வெற்றிகரமாக சேஸிங் செய்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது ஆஸ்திரேலியா முறியடித்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

ஐசிசி தொடர்களில் அதிகபட்ச சேசிங்ஸ்கள்

  • 352 -ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து,  லாகூர் - சாம்பியன்ஸ் கோப்பை 2025
  • 345 - பாகிஸ்தான் vs இலங்கை, ஹைதராபாத் - உலகக் கோப்பை 2023
  • 328 - அயர்லாந்து vs இங்கிலாந்து, பெங்களூரு  - உலகக் கோப்பை 2011
  • 322 - இலங்கை vs இந்தியா, தி ஓவல் - சாம்பியன்ஸ் கோப்பை 2017
  • 322 - வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், டவுன்டன் - உலகக் கோப்பை 2019
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை