இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியானது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதனையத்தொடர்ந்து இந்திய அணியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இதனைடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாகவும் நடைபெற இருப்பதன் காரணமாக இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை (2025-26)
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
- முதல் டி20, ஆகஸ்ட் 10: மராரா மைதானம், டார்வின்
- இரண்டாவது டி20, ஆகஸ்ட் 12: மராரா மைதானம், டார்வின்
- மூன்றாவது டி20, ஆகஸ்ட் 16: கசாலிஸ் மைதானம், கெய்ர்ன்ஸ்
- முதல் ஒருநாள் ஆகஸ்ட் 19: கசாலிஸ் ஸ்டேடியம், கெய்ர்ன்ஸ்
- இரண்டாவது ஒருநாள், ஆகஸ்ட் 22: கிரேட் பேரியர் ரீஃப் அரங்கம், மெக்கே
- மூன்றாவது ஒருநாள், ஆகஸ்ட் 24: கிரேட் பேரியர் ரீஃப் அரங்கம், மெக்கே
ஆஸ்திரேலியா vs இந்தியா
- முதல் ஒருநாள், அக்டோபர் 19: பெர்த் ஸ்டேடியம், பெர்த்
- இரண்டாவது ஒருநாள், அக்டோபர் 23: அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
- மூன்றாவது ஒருநாள், அக்டோபர் 25: எஸ்சிஜி, சிட்னி
- முதல் டி20, அக்டோபர் 29: மனுகா ஓவல், கான்பெரா
- இரண்டாவது டி20, அக்டோபர் 31: எம்சிஜி, மெல்போர்ன்
- மூன்றாவது டி20, நவம்பர் 2: பெல்லரிவ் ஓவல், ஹோபார்ட்
- நான்காவது டி20, நவம்பர் 6: கோல்ட் கோஸ்ட் மைதானம், கோல்ட் கோஸ்ட்
- ஐந்தாவது டி20, நவம்பர் 8: தி கப்பா, பிரிஸ்பேன்
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (ஆஷஸ் தொடர்)
- முதல் டெஸ்ட், நவம்பர் 21-25: வெஸ்ட் டெஸ்ட், பெர்த் மைதானம், பெர்த்
- இரண்டாவது டெஸ்ட், டிசம்பர் 4-8: பகல்-இரவு டெஸ்ட், தி கப்பா, பிரிஸ்பேன்
- மூன்றாவது டெஸ்ட்,டிசம்பர் 17-21: கிறிஸ்துமஸ் டெஸ்ட், அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
- நான்காவது டெஸ்ட், டிசம்பர் 26-30: பாக்ஸிங் டே டெஸ்ட், எம்சிஜி, மெல்போர்ன்
- ஐந்தாவது டெஸ்ட், ஜனவரி 4-8: பிங்க் டெஸ்ட், எஸ்சிஜி, சிட்னி