ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
இங்கிலாந்து அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தொடர்கிறார். மேற்கொண்டு ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அதேசமயம் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்திய டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், தற்சமயம் அதிலிருந்து மீண்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மார்க் வுட், சோயப் பஷீர் ஆகியோரும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இதில் சோயப் பஷீர் இந்திய டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்தார். அதேசமயம் மார்க் வுட், கடந்த சில மாதங்களாகவே காயத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்சமயம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார். இதுதவிர்த்து ஜோ ரூட், ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ், பென் டக்கெட், ஒல்லிஸ் போப், ஜேமி ஸ்மித், மேத்யூ பாட்ஸ் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஸாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், மார்க் வுட்
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாம் கரன், லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், லூக் வுட்
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து டி20 அணி:ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஸாக் கிராலி, சாம் கரன், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்