AUS vs SL, 2nd T20I: பரபரபான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

Updated: Sun, Feb 13 2022 17:53 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 48 ரன்களை சேர்த்தார். இலங்கை தரப்பில் ஹசரங்கா, சமீரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா மட்டும் நிலைத்து நின்று அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிபாதைக்கும் அழைத்துச் சென்றார். 

இறுதி ஓவரில் இலங்கை வெற்றிபெற 19 ரன்கள் தேவைப்பட்டது. அதனை எதிர்கொண்ட இலங்கை அணி 18 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை சமன் செய்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. 

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஹசில்வுட்டின் பந்துவீச்சினால் 5 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3ஆவது பந்திலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை