ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement
ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அதேநாளில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ஏடி பரிசோதனை முடிவிலும் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனால் அவரால் இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மாற்றாக எந்தவீரரும் அறிவிக்கப்படவில்லை.
பிப்ரவரி 20 வரை நடைபெறவுள்ள 5 ஆட்டங்களும் சிட்னி கிரிக்கெட் மைதானம், மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளன.