AUS vs WI, 2nd T20I: வார்னர், டிம் டேவிட் காட்டடி; விண்டீஸுக்கு 179 இலக்கு!

Updated: Fri, Oct 07 2022 15:24 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் காமரூன் க்ரீன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் விளையாடிய ஆரோன் ஃபிஞ்ச் 15 ரன்களோடு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 41 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 75 ரன்களோடு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு ரன் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகினார்.

இதையடுத்து களமிறங்கிய டிம் டேவிட் வந்த வேகத்தில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை