AUS vs WI, 2nd Test: ஆஸி பந்துவீச்சில் சீட்டுக்கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்; தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Thu, Jan 25 2024 12:07 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட டிராவிஸ் ஹெட்டிற்கு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேமரூன் க்ரீனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கேமரூன் க்ரீன் கரோனா தொற்றிலிருந்து மீளாததால் அவர் சக வீரர்களுடன் நெருங்காமல் ஐசிசி நெறிமுறைகளை பின்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிரேத்வைட் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த சந்தர்பால் - மெக்கன்ஸி இணை ஓரளவு தாக்குபிடித்து விளையாடினர். பின்னர் மெக்கன்ஸி 21 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும், சந்தர்பால் 21 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து களமிறங்கிய அலிக் அதானஸ் 8 ரன்களுக்கும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, முதல்நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. விண்டீஸ் தரப்பில் கெவம் ஹாட்ஜ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியின் போது ஜோஷ் ஹசில்வுட் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் சகவீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேமரூன் க்ரீனும் அவருக்கு அருகில் நெருங்கி வருவது போன்று விலகி சென்றார். அச்சமயத்தில் ஹசில்வுட் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் செய்த செய்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை