ஷமார் ஜோசப் ஒரு சூப்பர் ஸ்டார் - கிரெய்க் பிராத்வைட்!

Updated: Sun, Jan 28 2024 16:05 IST
ஷமார் ஜோசப் ஒரு சூப்பர் ஸ்டார் - கிரெய்க் பிராத்வைட்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அதன்படி கடந்த 25ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 22 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 216 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 91, கேமரூன் க்ரீன் 42 ரன்களைச் சேர்த்ததைத் தவிற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் அந்த அணி 207 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமார் ஜோசப் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூல வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்நிலையில் இந்த வெற்றிகுறித்து பேசிய  வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைத், “ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றியைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற முடியாமல் தடுமாறி வந்தோம். ஆனால் என்னைப்பொறுத்த வரை இது எங்களுடைய ஆரம்பம் தான். இனி இதுபோன்ற பல வெற்றிகளை நாங்கள் பதிவுசெய்வோம். 

இந்த போட்டிக்கு முன்னதாக ரோட்னி ஹாக் கூறிய சில வார்த்தைகள் எங்களை உத்வேகப்படுத்தியதாக நினைக்கிறேன். அவர் எங்களைப் பார்த்து நாங்கள் பரிதாபமாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் உள்ளதாக கூறினார். அது எங்களை இப்போட்டியில் வெல்ல உத்வேகப்படுத்தியது. அதனால் நாங்கள் பரிதாபமானவர்கள் அல்ல என்பதனை இந்த உலகிற்கு காட்ட நினைத்தோம். 

 

மேலும் நான் அவரிடம் எங்களது இந்த பலம் போதுமா என்பதை கேட்க விரும்புகிறேன். நாங்கள் எப்படிபட்ட வீரர்கள் என்பதனை இந்த உலகிற்கு காட்ட விரும்புகிறோம். இன்றைய போட்டிக்கு முன் மருத்துவர் என்னிடன் ஷமார் ஜோசப்பால் பந்துவீச முடியும் என்று கூறினார். அதனால் நான் அவரை உடனடியாக பந்துவீச அழைத்தேன். அவர் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டு தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார்.

அவர் வருங்காலங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது. ஏனெனில் இப்போட்டியில் வெல்லும் வரை நான் பந்துவீசுவதை நிறுத்தமாட்டேன் என்று அவர் என்னிடம் கூறினார். அவர் சொன்னதைப் போலவே செய்தும் காட்டியுள்ளார். எங்கள் அணி வீரர்களை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொள்வோம் என நினைக்கிறென்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை