AUSW vs INDW: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என மூன்று தொடர்களில் இந்திய மகளிர் அணி விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் ஆட்டம் மெக்கேவில் இன்று நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டார்சி பிரெளன் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, சிறப்பாக விளையாடி 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது. இதில் தொடக்க வீராங்கனை ரேச்சல் ஹைனஸ் 93 ரன்களும், கேப்டன் மேக் லேனிங் 53 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். மற்றொரு தொடக்க வீராங்கனை ஆலிஸா ஹீலி 77 ரன்கள் எடுத்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 25 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2018 மார்ச் 12 முதல் விளையாடிய அனைத்து ஒருநாள் ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்று, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக உள்ளது.