சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் பாட் கம்மின்ஸ்!

Updated: Tue, Nov 15 2022 12:17 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதற்கான வேலைகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அணி வகுத்து இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆஷஸ் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர்ருக்கு முன் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். கொல்கத்தா அணியின் புரிதலுக்காக எனது நன்றிகள். அருமையான வீரர்கள் மற்றும் பணியாளர்கள் குழு நான் விரைவில் அங்கு திரும்புவேன் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

கடந்த ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்சை கொல்கத்த அணி ரூ.7.25 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் ஓய்வு பெற்றதை அடுத்து பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ்சும், டி20 அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச்சும் செயல்பட்டு வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை