AUSW vs NZW : தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

Updated: Wed, Apr 07 2021 17:02 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத்தேர்வு செய்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ரேச்சல் ஹெய்னெஸ், அலிசா ஹீலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ரேச்சல் ஹெய்னெஸ் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரேச்சல் ஹெய்னெஸ் 87 ரன்களை குவித்தார். 

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 45 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து தனது 23ஆவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை