ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்திலேயே சிக்கலை சந்திக்கும் ஆஸ்திரேலியா!

Updated: Mon, May 27 2024 14:46 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்க போட்டு லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதுடன் மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பினார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. 

அதற்கேற்ற வகையிலேயே ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டும் மிட்செல் ஸ்டார்க் உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் முழு உடற்தகுதியை எட்டுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியானது நாளை மறுநாள் நமீபியா அணியை எதிர்த்தும், மே 31ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸை எதிர்த்தும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இந்த பயிற்சி ஆட்டத்தில் முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஒருசில தினங்கள் தனது குடும்பத்தினருடன் செலவிட்டு அதன் பின்னரே ஆஸ்திரேலிய அணியுடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோரும் இன்னும் அமெரிக்கா செல்லாமல் உள்ளனர். இதனால் இவர்கள் அனைவரும் ஓமன் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் முதல் லீக் ஆட்டத்திற்கு முன்னதாக அணியுடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியானது போதிய வீரர்கள் இன்றியே பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை