செப்டம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்!

Updated: Tue, May 10 2022 14:56 IST
Australia Set To Tour India For 3 T20Is In September 2022; To Return For Border-Gavaskar Trophy In (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி அடுத்த ஓர் ஆண்டு எந்தெந்த நாட்டு அணிகளுடன் விளையாடப் போகிறது என்பது குறித்த அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

இதில் ஆஸ்திரேலிய அணி அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஏராளமான டி20, ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக உள்நாட்டில் ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுடன் டி20 தொடர்களில் பங்கேற்கிறது.

செப்டம்பர் மாதம் இந்தியா பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் போட்டி அட்டவணை:

2022-ஜூன்-ஜூலை: இலங்கை பயணம்(3டி20, 3ஒருநாள் போட்டி, 2டெஸ்ட்)
2022-ஆகஸ்ட் - செப்டம்பர்: ஜிம்பாப்வே(3ஒருநாள் போட்டி), நியூஸிலாந்து(3ஒருநாள் போட்டி)
2022- செப்டம்பர்: இந்தியாவுடன் 3 டி20 போட்டிகள்
2022-அக்டோபர்: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணியுடன் 6 டி20 போட்டிகள்
2022-அக்-நவம்பர்: டி20 உலகக் கோப்பை
2022-நவம்பர்: இங்கிலாந்துடன் 3ஒருநாள் போட்டித் தொடர்
2022-23 டிசம்பர்-ஜனவரி: வெஸ்ட் இண்டீஸ் (2டெஸ்ட்),தென் ஆப்பிரிக்கா(3டெஸ்ட்,3ஒருநாள்)
2023-பிப்ரவரி மார்ச்: இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
2023-மார்ச்-மே: ஐபிஎல் டி20 தொடர்
2023- ஜூன் - ஜூலை: இங்கிலாந்து சென்று ஆஷஸ் டெஸ்ட் தொடர்(5டெஸ்ட்)
2023-ஆகஸ்ட்: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்(3டெஸ்ட்)
2023-அக்-நவம்பர்: இந்தியாவில் ஒருநாள்போட்டி உலகக் கோப்பை

Also Read: IPL 2022 - Scorecard

இந்திய அணி ஜூன்9ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை தென் ஆப்பிரிக்க அணியுடன் உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு அயர்லாந்து அணியுடன் 2டி20 போட்டிகளில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அந்தபோட்டிகள் முடிந்தபின் இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட கடைசி டெஸ்டில் இந்திய அணி விளையாடுகிறது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை