ஆஸ்திரேலியா vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Oct 30 2022 19:32 IST
Australia vs Ireland, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable X (Image Source: Google)

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்ற ஆஸ்திரேலிய அணியானது தற்போது நடப்பு சாம்பியன் என்ற மிகப்பெரிய கவுரவத்தோடு தங்களது நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் ஒன்றில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக மெல்போர்ன் நகரில் நடைபெற இருந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி என இரண்டு போட்டிகளுமே மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக நான்கு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்டது.

இதில் குறிப்பிட வேண்டிய விசயம் யாதெனில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ரத்து என மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று மோசமான ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் வெற்றியோடு சேர்த்து 5 புள்ளிகளுடன் முதல் இடத்தை வகிக்கிறது. 

அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் ரன் ரேட்டின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை விட முன்னிலையில் உள்ளனர். இந்த சுற்றில் கிட்டத்தட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி அரையிறுதி வாய்ப்பை தற்போதைய உறுதி செய்துள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து இரண்டு போட்டியில் வென்றாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாது என்று தற்போதைய புள்ளி விவரம் கூறுகிறது. 

இதன் காரணமாக அயர்லாந்துடனான போட்டியில் மிகபெரிய விகிதாசரி வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுப்பக்கம் அயர்லாந்து அணியும் இங்கிலாந்தை வீழ்த்திய புத்துணர்ச்சியுடனும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்கவுள்ளது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் வார்னர், ஃபிஞ்ச், மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ், மிட்செல் மார்ஷ், கமாரூன் க்ரீன் என அதிரடி வீரர்களும், ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளதால் அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

மறுபக்கம் அயர்லாந்து அணி பேட்டிங்கில் பால் ஸ்டிர்லிங், ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர், ஆண்டி பால்பிர்னி ஆகியோரையும் பந்துவீச்சில் மார்க் அதிர், ஜோஷூவா லிட்டில், பேரி மெக்கர்த்தி ஆகியோர் இருப்பது நிச்சயம் எதிரணிக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs அயர்லாந்து
  • இடம் - கபா, பிரிஸ்பேன்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 01
  • ஆஸ்திரேலியா - 01
  • அயர்லாந்து - 0

உத்தேச அணி

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கே), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.

அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), லோர்கன் டக்கர் , ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஃபியோன் ஹேண்ட், ஜோசுவா லிட்டில்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - லோர்கன் டக்கர்
  • பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஆண்ட்ரூ பால்பிர்னி
  • ஆல்ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், கர்டிஸ் கேம்பர்
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோசுவா லிட்டில்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை