ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Dec 16 2022 10:23 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சை வெடித்த பிறகு இவ்விரு அணிகள் சந்திக்கும் முதல் டெஸ்ட் இதுவாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - கபா கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்
  • நேரம் - அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் இறுதிப்போட்டிக்கான இடத்தையும் உறுதிசெய்துள்ளது. 

மேலும் அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் என பல வாய்ந்த பேட்டிங் ஆர்டரைப் பெற்றுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நாதன் லையனுடன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலாண்ட் உள்ளது எதிரணிக்கு தலைவலியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் டின் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவுசெய்தால் மட்டுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

அணியின் பேட்டிங்கில் எல்கர், கீகன் பீட்டர்சன், சாரெல் எர்வீ, ஹென்ரிச் கிளாசென் ஆகியோரையும் பந்துவீச்சில் காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி, கேஷவ் மகாராஜ் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோரைக் கொண்டுள்ளதால் நிச்சயம் எதிரணிக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 98
  • ஆஸ்திரேலியா - 52
  • தென் ஆப்பிரிக்கா - 26
  • முடிவில்லை - 20

போட்டியைக் காணும் முறை

இத்தொடரின் ஒளிபரப்பை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் கையகப்படுத்தியுள்ளதால் இதனை சேனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் காண முடியும்.

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன்.

தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர், சரேல் எர்வீ, கயா சோண்டோ, டெம்பா பவுமா, வான் டெர் டுசென், கைல் வெர்ரேய்ன்/ ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - கைல் வெர்ரைன்
  • பேட்டர்ஸ் – டீன் எல்கர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஸ்சாக்னே, சரேல் எர்வீ
  • ஆல்-ரவுண்டர்கள் - கேசவ் மகாராஜ், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை