டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Oct 21 2021 22:42 IST
Australia vs South Africa, T20 World Cup 13th Match – Match Prediction, Fantasy XI Tips & Probable X (Cricketnmore)

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

மொத்தம் பதினாறு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. 

அதன்படி 23ஆம் தேதி தொடங்கும் 13ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீப காலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காமல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டேவிட் வார்னரின் மோசமான ஃபார்ம் அணிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் மார்ஷ், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் என அதிரடி வீரர்கள் அணியில் இருப்பதால் நிச்சயம் அந்த அணி அதிக ரன்களை ஸ்கோர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரையில் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசி வருவதால், நிச்சயம் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி கடந்த சில மாதங்களில் டி20 கிரிக்கெட் போட்டிகாக தயாராகியுள்ளது. அதிலும் டி காக், வெண்டர் டுசென், மில்லர் ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி என டி20 ஸ்பெஷலிஸ்டுகள் நிச்சயம் எதிரணிக்கு தலைவலியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 18
  • ஆஸ்திரேலியா வெற்றி - 11
  • தென் ஆப்பிரிக்கா வெற்றி - 7

உத்தேச அணி

ஆஸ்திரேலியா - ஆரோன் பிஞ்ச் (கே), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஜோஷ் இங்லிஸ், ஆஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்.

தென் ஆப்பிரிக்கா - டெம்பா பாவுமா (கே), குயின்டன் டி காக் , ஐடன் மார்க்ராம், ராசி வான்டெர் டிசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், டுவைன் பிரிட்டோரியஸ், ஆன்ரிச் நோர்ட்ஜே, கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், மேத்யூ வேட்
  • பேட்டர்ஸ் - ஸ்டீவன் ஸ்மித், ஐடன் மார்க்ராம், வான்டெர் டுசென்
  • ஆல் -ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர்
  • பந்துவீச்சாளர்கள் - ஆன்ரிச் நோர்ட்ஜே, ககிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை