டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐக்கிய அரபு அமீரகத்து ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மீதம் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - அபுதாபி
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நாளை போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா தொற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழக்கும்.
அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் இருப்பது வலுசேர்க்கிறது. பந்துவீச்சில் ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
அதேசமயம் நடப்பு சீசனிலும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அணியில் அதிரடியான பேட்டர்கள் இருந்தும் அந்த அணியால் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை.
அதேபோல் பந்துவீச்சாளர்களும் சரிவர சோபிக்காதது அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது. இருப்பினும் ஆறுதல் வெற்றியோடு வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட்டு செல்ல முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 16
- ஆஸ்திரேலியா வெற்றி - 6
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 10
உத்தேச அணி
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் (கே), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
வெஸ்ட் இண்டீஸ் - கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹோசைன், ரவி ராம்பால்
Also Read: T20 World Cup 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
- பேட்டர்ஸ் - ஆரோன் ஃபிஞ்ச், ஷிம்ரான் ஹெட்மையர், டேவிட் வார்னர்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ்
- பந்துவீச்சாளர்கள் - ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், அக்கேல் ஹோசைன், ஜோஷ் ஹேசில்வுட்