ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டிரான்ஸ்விலேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே
- இடம் - டோனி அயர்லாந்து மைதான, டிரான்ஸ்விலே
- நேரம் - காலை 9.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.
இதில் ஃபிஞ்ச் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், வார்னர், ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. பந்துவீச்சில் ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் இருப்பது அணிக்கு சாதமாக அமைந்துள்ளது.
அதேசமயம் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகி, அவருக்கு மாற்று வீரராக ஜோஷ் இங்கிலிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் ரேஜிஸ் சகாப்வா தலைமையிலான ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா, ரியான் பர்ல், இன்னெசண்ட் கையா, வெஸ்லி மதவெரே ஆகியோர் இருப்பது பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்துள்ளது.
மேலும் பந்துவீச்சில் பிராட் எவன்ஸ், ரிச்சர்ட், விக்டர் நாயுச்சி ஆகியோர் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று சவாலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 31
- ஆஸ்திரேலியா - 28
- ஜிம்பாப்வே - 2
- முடிவில்லை - 1
உத்தேச அணி
ஆஸ்திரேலியா - ஆரோன் ஃபிஞ்ச்(கே), டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லாபுஷாக்னே.
ஜிம்பாப்வே - இன்னசென்ட் கையா, தடிவானாஷே மருமானி, வெஸ்லி மாதேவேரே, டோனி முன்யோங்கா, சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா(கே), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, விக்டர் நியாச்சி
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - அலெக்ஸ் கேரி, ரெஜிஸ் சகப்வா
- பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச்,
- ஆல்-ரவுண்டர்கள் - சிக்கந்தர் ராஸா, கிளென் மேக்ஸ்வெல், ரியான் பர்ல்
- பந்துவீச்சாளர்கள் - கேமரூன் கிரீன், பிராட் எவன்ஸ், மிட்செல் ஸ்டார்க்