சில வீரர்கள் பாகிஸ்தான் பயணம் செய்யவில்லை என்றால் ஆச்சர்யம் படமாட்டேன் - ஜோஷ் ஹேசில்வுட்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 1998ஆம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. மார்ச் 3ஆம் தேதி இத்தொடர் தொடங்கும் நிலையில் ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தொடரை ரத்து செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் முழு உறுதி அளித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி செல்கிறார். ஆனால், சில வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சில வீரர்கள் பயணம் செய்யவில்லை என்றால் நான் ஆச்சர்யம் அடையமாட்டேன் என வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹேசில்வுட் கூறுகையில் ‘‘ஏராளமான விசயங்களில் கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆகியவை அதிக அளவில் ஈடுபட்டுள்ளது. ஆகவே, வீரர்களிடம் அதிக அளவிலான நம்பிக்கை உள்ளது. இருந்தாலும், சில கவலைகள் வீரர்களிடம் உள்ளது. வீரர்கள் சிலர் பாகிஸ்தான் பயணம் செய்யவில்லை எனில் ஆச்சர்யம் படமாட்டேன்.
அது பிரச்சினையாக இருக்காது. ஒவ்வொருவடைய சொந்த முடிவுக்கு மரியாதை கொடுக்க வேணடும். இது நியாயமானது. ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்பத்துடன் ஆலோசனை நடத்துவார்கள். அதன்பின் தங்களது முடிவை அறிவிப்பார்கள். ஒவ்வொருவரும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.