ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணி 2023: ஆதிக்கம் செலுத்தும் ஆஸி வீராங்கனைகள்!

Updated: Tue, Jan 23 2024 15:11 IST
ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணி 2023: ஆதிக்கம் செலுத்தும் ஆஸி வீராங்கனைகள்! (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளைக் கொண்டு ஆண்டின் சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், 2023ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி ஐசிசி அறிவித்து இந்த அணியின் கேப்டனாக இலங்கையைச் சேர்ந்த சமாரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 அணியின் கேப்டனாகவும் அத்தபத்து நியமிக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர்த்து இந்த அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர், அனல்பெல் சதர்லேண்ட் என 5 விராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் நியூசிலாந்து அணியிலிருந்து அமிலியா கெர், லியா டஹுஹு, இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட், தென் ஆப்பிரிக்காவின் நதின் டி கிளர்க், வங்கதேச அணியின் நஹிதா அக்தர் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் இந்திய அணியைச் சேர்த எந்த வீராங்கனைகளும் ஐசிசி ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணி 2023: ஃபோப் லிட்ச்ஃபீல்ட்(ஆஸ்திரேலியா), சமாரி அத்தபத்து (கேப்டன், இலங்கை), எலிஸ் பெர்ரி(ஆஸ்திரேலியா), அமெலியா கெர்(நியூசிலாந்து), பெத் மூனி(ஆஸ்திரேலியா), நாட் ஸ்கிவர்-பிரண்ட்(இங்கிலாந்து), ஆஷ் கார்ட்னர்(ஆஸ்திரேலியா), அனாபெல் சதர்லேண்ட்(ஆஸ்திரேலியா), நதின் டி கிளர்க்(தென் ஆப்பிரிக்கா), லியா தஹுஹு(நியூசிலாந்து), நஹிதா அக்தர்(வங்கதேசம்)

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை