மகளிர் டி20 உலகக்கோப்பை: பிஸ்மா மரூஃப், ஆயிஷா நசீம் அபாரம்; இந்தியாவுக்கு 150 டார்கெட்!

Updated: Sun, Feb 12 2023 20:10 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

கேப்டவுனில் உள்ள நியுலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனைகள் ஜாவேரியா கான் 8 ரன்களிலும், முனீபா அலி 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதா தார் 0, சித்ரா அமீன் 11 ரன்கள் என அடுத்தடுத்து நடையைக் கட்டினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பிஸ்மா மரூஃப் - ஆயிஷா நசீம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஸ்மா மரூஃப் 45 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிஸ்மா மரூஃப் 68 ரன்களையும், ஆயிஷா நசீம் 43 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை