அஸ்வின் பாணியின் அபாரஜித்; டிஎன்பிஎல் தொடரில் மான்கட்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 6ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பின சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியில் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.
அதன்பின் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. கௌசிக் காந்தி மற்றும் நாரயணன் ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அப்போது ஆட்டத்தின் 4ஆவது ஓவரை வீசிய பாபா அப்ரஜித் அஸ்வின் ஸ்டைலில் ஒரு சம்பவத்தை செய்தார்.
பாபா அப்ரஜித் ஓவர் வீசும் போது, பந்துவீச்சாளர் முனையில் நின்று கொண்டிருந்த நாரயணன் ஜெகதீசன் எல்லைக் கோட்டை விட்டு நகர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துவிட்டு, மீண்டும் பந்துவீச சென்றார். மீண்டும் நாராயணன் ஜெகதீசன் அதே தவறை செய்ய, இம்முறை எவ்வித எச்சரிக்கையும் இன்றி அப்ரஜித், மான்காட் முறையில் ரன் அவுட் செய்தார்.
இதனை மறு ஆய்வு செய்த மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க, ஜெகதீசன் கடுப்பாகி பெவிலியன் நோக்கி சென்றார். பாபா அப்ரஜித் செய்த இந்த சம்பவம் மீண்டும் ஒரு பேசும் பொறாக மாறியது. தமிழக வீரர் அஸ்வின் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறையும், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மான்காட் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
தற்போது அஸ்வின் ஸ்டைலை பயன்படுத்தி, டிஎன்பிஎல் போன்ற உள்ளூர் கிரிக்கெட்டிலும் வீரர்கள் ஆட்டமிழக்க செய்து வருகின்றனர். இந்த வகை அவுட்க்கு விதியில் இடமிருப்பதாக ஐசிசியே அண்மையில் அறிவித்துள்ள நிலையில், அப்ரஜித் செய்தது தவறு இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.