ஆசிய கோப்பை: ஹாசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

Updated: Wed, Aug 30 2023 21:25 IST
Image Source: Google

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது . 13 போட்டிகளைக் கொண்ட ஆசிய கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெற இருக்கிறது.

இதன் முதல் போட்டி இன்று பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளுக்கிடையே முல்தான் நகரில் வைத்து இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் விரைவிலேயே ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அந்த அணியின் எண்ணிக்கை 111 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிஸ்வான் 50 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் விசித்திரமான முறையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஆட வந்த அகா சல்மான் ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க மீண்டும் ஒரு சிறிய சரிவை சந்தித்தது. ஐந்தாவது விக்கெட் இருக்கு பாபர் அசாம் உடன் ஜோடி சேர்ந்தார் இப்திகார் அகமது. பாபர் அசாம் ஒரு முனையில் நிதானமாக ஆட மறுமுனையில் இப்திகார் அதிரடியாக ஆடினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

இஃப்திகார் அகமது தனது அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பாபர் அசாம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 19ஆவது சதத்தை நிறைவு செய்தார் . 102 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் பாபர் அசாம் இன்றைய போட்டியில் தனது 19ஆவது சதத்தை கடந்திருப்பதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் துவக்க வீரரான ஹாஷிம் அம்லா ஆகியோரின் சாதனைகளை முறியடித்திருக்கிறார்.

இந்திய அணியின் விராட் கோலி 124 இன்னிங்ஸ்கலில் தனது 19ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் துவக்க வீரரான ஹாஷிம் அம்லா 104 இன்னிங்ஸ்களில் 19 சதங்களைக் கடந்திருந்தார். தற்போது நேபால் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 102 இன்னிங்ஸ்களில் 19ஆவது சதத்தை பூர்த்தி செய்து விராட் கோலி மற்றும் ஹாஷிம் அம்லா ஆகியோரின் அதிவேகமாக 19 சதங்கள் எடுத்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள் எட்டுமா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் பாபர் அசாம் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 300 ரன்கள் எளிதாகக் கடந்தது .பாபர் அசாமுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அகமது 68 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இவர்கள் இருவரது அவ்வாறு ஆட்டத்தினால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆர் விக்கெட்டுகளை இழந்திருந்தது. மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 14 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இஃப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை