இந்தியாவை வீழ்த்தியது தான் கடந்தாண்டின் சிறப்பான தருணம் - பாபர் ஆசாம்!

Updated: Sun, Jan 02 2022 21:46 IST
Babar Azam Rates Pakistan Beating India In T20 World Cup As 'Our Best Moment Of The Year' (Image Source: Google)

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. 

மேலும் பாகிஸ்தான் அணி முதல் முறையாக இந்திய அணியை ஐசிசி தொடரில் வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்திருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் அளித்த பேட்டி ஒன்றில், “கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தோம். ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் என்னை அதிகமாக காயப்படுத்தியது இந்த தோல்வி தான். 

ஆனால் அதே உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை நாங்கள் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தோம். அது ஒரு அற்புதமான சாதனை. ஏனெனில் இதற்கு முன்பு எந்த ஒரு உலக கோப்பை போட்டிகளிலும் இந்திய அணியை நாங்கள் வென்றதில்லை. 

முதல் முறையாக கிட்டிய இந்த வெற்றி தான் 2021ஆம் ஆண்டில் எங்களது சிறந்த தருணமாகும். இப்போது நாங்கள் திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது. பேட்டிங்கில் தனிப்பட்ட சாதனைகள் அணியின் வெற்றிக்கு உதவினால் அது தான் எனக்கு மகிழ்ச்சியை தரும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை