தொடர் நாயகன் இவருக்கு கிடைத்திருக்க வேண்டும் - பாபர் ஆசாம்!

Updated: Mon, Nov 14 2022 15:24 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.

மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20  ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஷான் மசூத் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி.

138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19ஆவது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. 

இதற்கு முன் 2010இல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது. இப்போட்டி முடிந்தப் பிறகு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் சதாப் கான், தொடர்ந்து வனிந்து ஹசரங்கா, ஷிக்கந்தர் ராசா ஆகியோர் போட்டியில் இருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம் கரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாபர் அசாமிடம், யாருக்கு தொடர் நாயகன் விருதி கிடைத்திருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாபர் அசாம், ‘‘சதாப் கான் இத்தொடரில் அதிரடியாக செயல்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நாம் அனைவரும் அதனைப் பார்த்தோம். அவருக்குத்தான் தொடர் நாயகன் விருதினை கொடுத்திருக்க வேண்டும். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினார். இவருக்குத்தான் தொடர் நாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::