BAN vs AFG, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஹைபிரீட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 4ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏற்கெனவே வங்கதேச அணி தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணியும் சமீபத்தில் பாகிஸ்தானிடன் ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - கடாஃபி மைதானம், லாகூர்
- நேரம் - மாலை 3 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இலங்கை அணிக்கெதிரான முதல் போட்டியில் படுமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் தமிம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் காயம் காரணமாக் தொடரிலிருந்து விலகியுள்ளதால், மீதமுள்ள பேட்டர்கள் மீது அதிகபடியான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம் போன்ற அனுபவ வீரர்கள் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹீம், டஸ்கின் அகமது, மஹெதி ஹசன், சொரிஃபுல் இஸ்லாம் போன்றோருடன் ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோரும் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுவதுமாக இழந்தது. இருப்பினும் அந்த அணி பாகிஸ்தானுக்கு நிகராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது கூடுதல் கவனம் பெறுகிறது. அதேசமயம் சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுகுமுறையும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இப்போட்டியின் மீது அதிக எதிர்பார்க்கள் எழுந்துள்ளன.
அணியின் பேட்டிங்கில் ரஹ்மனுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, ரஹ்மத் ஷா போன்றோரும், பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, குலாபுதின் நைப், கரிம் ஜானத் போன்றோர் இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது உறுதி.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 14
- வங்கதேசம் - 08
- ஆஃப்கானிஸ்தான் - 06
உத்தேச லெவன்
வங்கதேசம்: முகமது நைம், தஞ்சீத் ஹசன், நஜ்முல் ஹுசைன் சாண்டோ, தௌஹீத் ஹ்ரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிக்கூர் ரஹீம், மெஹ்தி ஹசன் மிராஜ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான்.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹசன், இப்ராஹிம் ஸத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், குல்புதின் நைப், ஃபசல் ஹாக் ஃபரூக்கி, ஃபரித் அகமது..
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
- பேட்ஸ்மேன்கள்- நஸ்முல் ஹுசைன் சாண்டோ, இப்ராஹிம் சத்ரன் (கேப்டன்)
- ஆல்-ரவுண்டர் - ஷகிப் அல் ஹசன் (துணை கேப்டன்), முகமது நபி, குல்பாடின் நைப், மெஹ்தி ஹசன் மிராஜ்
- பந்துவீச்சாளர்கள்- தஸ்கின் அகமது, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.