BAN vs AUS 3rd T20I: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!

Updated: Fri, Aug 06 2021 18:42 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இத்தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி இன்று தாக்காவில் நடைபெறுகிறது. ஆனால் மழைக் காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வு சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னர் மழை நின்றதால் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியா (விளையாடும் XI): மேத்யூ வேட் (c), பென் மெக்டெர்மோட், மிட்செல் மார்ஷ், ஹென்றிக்ஸ், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

வங்கதேசம் (விளையாடும் XI): முகமது நைம், சௌமியா சர்கார், ஷகிப் அல் ஹசன், மஹேதி ஹசன், மஹ்முதுல்லா (C), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை