BAN vs SL, 2nd Test: மூன்று ஓவரில் ஆட்டத்தை முடித்து தொடரை வென்றது இலங்கை!

Updated: Fri, May 27 2022 16:14 IST
Image Source: Google

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டி டாக்காவில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 25/5 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் முஷ்பிசுர் ரஹீம் 175 (355), லிடன் தாஸ் 141 (246) இருவரும் அபாரமாக செயல்பட்டு அணியை மீட்டனர். இறுதியில் வங்கதேச அணி 365/10 ரன்களை குவித்தது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இலங்கை அணியில் ஒசாக ஃபெர்ணான்டோ (57), கருணரத்னே (80), மேத்யூஸ் (145), டி சில்வா (58), சண்டிமல் (124) என களமிறங்கியவர்களில் பெரும்பாலோனர் பெரிய ஸ்கோர் அடித்தார்கள். 

இதன்மூலம் இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 506/10 ரன்களை குவித்து அபார முன்னிலையை பெற்றது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் 140 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் களமிறங்கியபோது பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது. இதனால், முதல் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் லிட்டன் தாஸ் (52), ஷகிப் அல் ஹசன் (58) இருவரும் சேர்ந்து ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், வங்தேச அணி  தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 169/10 ரன்களை மட்டும் சேர்த்து, 29 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய அசிதா ஃபெர்னாண்டோ 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரகள் ஒசாக பெர்ணான்டோ 21 (9), கருணரத்னே 7 (9) இருவரும் சேர்ந்து, அணிக்கு மூன்று ஓவர்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். இதனால் இலங்கை அணி (29/0) 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசிதா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவது சிறப்பாக செயல்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை