ஆசிய கோப்பை 2022: வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளுடன், தகுதிச்சுற்றில் தகுதிபெறும் அணி 6ஆவது அணியாக இணையும்.
ஆசிய கோப்பைக்கான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், வங்கதேச அணி அறிவிப்பு மட்டும் தாமதமானது. வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் காயம் அடைந்திருந்தனர்.
மேலும் ஷகிப் அல் ஹசன், பெட் வின்னர் என்ற நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டால் மட்டுமே அவருக்கு அணியில் இடம் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து அதை ஷகிப் அல் ஹசன் ஏற்றுக்கொண்டதை அடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டது. சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். லிட்டன் தாஸ் காயத்தால் அணியில் இடம்பெறவில்லை. டி20 உலக கோப்பை வரை ஷகிப் அல் ஹசன் தான் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணி: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அனாமுல் ஹக் பிஜோய், முஷ்ஃபிகுர் ரஹீம், அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் சாய்கட், மஹ்மதுல்லா ரியாத், ஷேக் மஹெடி, சைஃபுதின், ஹசன் மஹ்மூத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், நசும் அகமது, சபிர் ரஹ்மான், மெஹிடி அசன் மிராஸ், எபாடட் ஹுசைன், பர்வேஸ் ஹுசைன் எமான், நூருல் ஹசன் சோஹன், டஸ்கின் அகமது.