டாம் லேதம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து !

Updated: Tue, Mar 23 2021 17:40 IST
Tom Latham (Image Source: Google)

நியூசிலாந்து , வங்கதேசம் அணிகளுக்கு இடையே யான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில்
பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணிக்கு கேப்டன் தமிம் இஃபால், மிதுன் இணை
அரைசதம் கடந்து அணிக்கு உதவியது. இதன் மூலம் வங்கதேச அணி இன்னிங்ஸ் முடிவில் 6
விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் சேர்த்தது. அந்த2அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்
தமிம் இஃக்பால் 78 ரன்களும், மிதுன் 73 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் (20), ஹென்ரி நிக்கோல்ஸ் (13) சொற்ப ரன்களில்
ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தேவன் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 93 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.

மறுமுனையில் களமிறங்கிய கேப்டனும், விக்கெட் கீப்பருமான டாம் லாதம் இறுதி வரை
ஆட்டமிழக்காமல் 108 பந்தில் 110 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணி 48.2 ஓவரிலேயே வெற்றி
இலக்கை எட்டியது.

இதன் மூலம் வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அனி 5
விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இப்போட்டியில் சதமடித்த டாம் லேதம்
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை