டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக தனித்துவ சாதனை படைத்த மஹெதி ஹசன்!

Updated: Thu, Jul 17 2025 12:57 IST
Image Source: Google

Mahedi Hasan Record: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர் மஹெதி ஹசன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா 46 ரன்களையும், தசுன் ஷனகா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதல் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் பர்வேஸ் ஹொசைன் ரன்கள் ஏதுமின்றியும், லிட்டன் தாஸ் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தன்ஸித் ஹசன் 73 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 27 ரன்களையும் சேர்க்க வங்கதேச அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. 

மேலும் இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த மஹெதி ஹசன் ஆட்டநாயகன் விருதையும், லிட்டன் தான் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினர். இந்நிலையில் இப்போட்டியில் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

இதற்கு முன் ரிஷாத் ஹொசைன் 18 ரன்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் மஹெதி ஹசன் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையைப் படைத்துள்ளார். வங்கதேச அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகமான மஹெதி ஹசன் இதுவரை 58 டி20 போட்டிகளில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வீரர்

  • மஹேதி ஹசன் - 4 விக்கெட்டுகளுக்கு 11 ரன்கள்
  • முஸ்தபிசுர் ரஹ்மான் - 4 விக்கெட்டுகளுக்கு 21 ரன்கள்
  • ரிஷாத் ஹசன் - 3 விக்கெட்டுகளுக்கு 18 ரன்கள்
  • ஷகிப் அல் ஹசன் - 3 விக்கெட்டுகளுக்கு 24 ரன்கள்
  • அல்-அமீன் ஹசன் - 3 விக்கெட்டுகளுக்கு 34 ரன்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை