மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான வங்கதேசம் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

Advertisement

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.

Advertisement

மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போதே இனி இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்ற அறிவிப்பையும் பிசிபி வெளியிட்டிருந்தது.  இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர். முன்னதாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்திருந்தது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக நிகர் சுல்தானா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக விக்கெட் கீப்பர் பேட்டர் ருபயா ஹைதருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வங்கதேச மகளிர் அணி: நிகர் சுல்தானா ஜோட்டி (கேப்டன்), நஹிதா அக்டர், ஃபர்சானா ஹக், ரூப்யா ஹைதர் ஜெலிக், ஷர்மின் அக்தர் சுப்தா, சோபனா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்டர், ஃபஹிமா காதுன், ரபேயா கான், மருஃபா அக்டர், ஃபரிஹா இஸ்லாம் த்ரிஸ்னா, ஷஞ்சிதா அக்தர் மக்லா, நிஷிதா அக்தர் நிஷி, சுமையா அக்டர்

Also Read: LIVE Cricket Score

 

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News