அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வங்கதேச அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணியும், டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியும் கைப்பற்றியது. இதனையடுத்து வங்கதேச அணி இம்மாதம் சொந்த மண்ணில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளயாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதலும், டி20 தொடர் நவம்பர் 27ஆம் தேதி முத்லும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் மீட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மெஹதி ஹசன் மிராஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் தற்சமயம் நஜ்முல் ஹொசைன் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி வரை கேப்டனாக தொடர்வார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர் தற்சமயம் மீண்டு கேப்டனாக தொடரவுள்ளார்.
இதுதவிர மஹ்முதுல் ஹசன், ஹசன் முராத் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், நயீம் ஹசன், மஹிதுல் ஹசன், அனாமுல் ஹக் உள்ளிட்டோர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு லிட்டன் தாஸ், மஹெதி ஹசன் மிராஸ், முஷ்ஃபிக்கூர் ரஹிம், ஜக்கர் அலி, தைஜுல் இஸ்லாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் குமர் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், சையத் கலீத் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, எபடோட் ஹொசைன் சௌத்ரி, ஹசன் முராத்.
Also Read: LIVE Cricket Score