வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 136 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹீம் 86 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபரீத் அஹ்மத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரியாஸ் ஹசன், ஹஸ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரான் மட்டுமே அரைசதம் கடந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 45.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்கதேச அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News