ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!

Updated: Sat, Mar 16 2024 16:01 IST
Image Source: Google

இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடடை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளனர். 

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்த கையோடு டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக வங்கதேச அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 03ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது. 

மேலும் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளை சட்டோகிராமிலும், கடைசி இரண்டு போட்டிகளை தாக்காவிலும் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான தேர்வில் ஜிம்பாப்வே அணி இல்லை என்றாலும், வங்கதேசத்துடனான இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொடருக்கு பிறகு வங்கதேச அணி அமெரிக்கா சென்று அங்கு அமெரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

நடப்பாண்டில் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரைக் கணக்கில் கொண்டு வங்கதேச அணி இந்த தொடர்களை விளையாடவுள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச அணி, அப்பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகளுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் - ஜிம்பாப்வே போட்டி அட்டவணை

  • முதல் டி20: மே 3, சட்டோகிராம்
  • இரண்டாவது டி20: மே 5, சட்டோகிராம்
  • மூன்றாவது டி20: மே 7 சட்டோகிராம்
  • நான்காவது டி20: மே 10, தாக்கா
  • ஐந்தாவது டி20: மே 12 தாக்கா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை